/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் கொள்முதல் மையம் திறப்பு தாமதம்
/
நெல் கொள்முதல் மையம் திறப்பு தாமதம்
ADDED : மார் 28, 2024 06:23 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பகுதியில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.
இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் வடுகபட்டி, அலங்காநல்லுார் பகுதிகளில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணிகள் மூன்று வாரங்களுக்கு முன் துவங்கின. பல கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் மையங்களை திறக்காமல் பற்றாக்குறை அதிகாரிகளால் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல் அளவீடு இயந்திரங்களை கொண்டு வந்து வைத்தும் அதிகாரிகள் இல்லாததால் நெல்லை அரசுக்கு விற்க முடியவில்லை. அரசு விலையை விட மூடைக்கு ரூ.200 குறைவாக தனியாருக்கு விற்கின்றனர். கொள்முதல் மையங்களை திறக்கும் வரை நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மையங்களில் கொள்முதல் பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.