
தடுப்புகள் எடுக்க வேண்டும்
மதுரை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் முன்பு ரோட்டின் இருபுறமும் தடுப்புகள்வைத்திருப்பதால் வயதானவர்கள், குழந்தைகள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். மாநகராட்சி, போக்குவரத்து போலீசார்தடுப்புகளை நீக்க வேண்டும்.
-- சுசீலா, கீழவாசல்
தெருநாய் தொல்லை
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தனியாக செல்வோரை, நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்க வருகின்றன. வயதானவர்கள்வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பிரதாப் சந்திரன், வில்லாபுரம்
ஆக்கிரமிப்பு கூடாரங்கள்
மதுரை தெப்பக்குளம் -- அண்ணாநகர் பாலத்தின் இருபுறமும், நாடோடி மக்கள் கூடாரங்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஏகநாத், வண்டியூர்
திறக்கப்படாத அங்கன்வாடி
மதுரை கோ.புதுார் இந்திரா நகரில் அங்கன்வாடி கட்டி முடிக்கப்பட்டு பல நாட்களாகியும், இன்னும் திறக்கப்படவில்லை. விரைவில் செயல்பாட்டுக்கு வர மாவட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அலெக்ஸாண்டர் அன்புராஜ், புதுார்
அசுத்த நீரால் ஆபத்து
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சிலை அருகே மாதக்கணக்கில் செப்டிக் டேங்க் அசுத்த நீர் வெளியேறி வருகிறது. அருகிலுள்ள பள்ளிக்கு வரும் மாணவர்கள் இக்கழிவால் சுகாதாரக் கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெய், தெப்பக்குளம்
ஆக்கிரமிப்பு கடைகள்
மதுரை அய்யர் பங்களா பம்பா நகர் மினிபஸ் நிறுத்தத்தில், மாநகராட்சி எச்சரிக்கை மீறி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஆறுமுகம், உச்சபரம்புமேடு