நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே கட்டப்புளியில் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இங்கு செயல்பட்ட தனியார் டெக்ஸ்டைல் மில் 2006ல் மூடப்பட்டது. பணியாற்றிய 510 தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தினர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், பாண்டியன், பொன் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், கிளை செயலாளர் பாலு பங்கேற்றனர். ரூ.6.74 கோடியை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

