ADDED : மார் 08, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு ஸ்டேட் வங்கி கிளை முன்பு அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கிகளில் அனைத்து பிரிவுகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பாளர் குமரன் தலைமை வகித்தார்.
நேஷனல் கான்பிடரேஷன் ஆப் பாங்க் எம்ப்ளாயீஸ் தலைவர் பரதன், ஆல் இந்தியா பேங்க் ஆபீசர்ஸ் கான்பிடரேஷன் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.