ADDED : ஜூலை 26, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி திருமுருகன் கோயில் முன்பாக கோயில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியத் தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். வக்கீல் சுந்தரவடிவேல் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் ராமன், வீரா, வெங்கடேஷ், லட்சுமணன், செல்லம்பட்டி ஒன்றியத் தலைவர் பூங்கொடி, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர். கோயில்களில் சாமி தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கோஷம் எழுப்பினர். பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சிவாஜி நன்றி கூறினார்.
