ADDED : ஜூலை 26, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: சாத்தங்குடியில் தமிழக கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம், அகில இந்திய அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொதுநல முன்னேற்ற சங்க செயல்வீரர்கள் கூட்டம் தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கவுரவத் தலைவர் கண்ணன் வரவேற்றார். பொருளாளர் பேச்சியப்பன், பொருளாளர் அஜந்தன் பேசினர்.
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து விளக்க மனு அளிப்பது, தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் மூன்று நேரமும் இலவச உணவு வழங்க வேண்டும், விபத்து மரணம் நிவாரண உதவி தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
