/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
/
கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 04:39 AM

உசிலம்பட்டி, : உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள் விற்பனை செய்ய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணைச் செயலாளர் நேதாஜி, செயலாளர் அலெக்ஸ், மாவட்ட அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெருமாள், சரவணன், சின்னச்சாமி, இரும்புத்துரை, வக்கீல்கள் ராஜேஷ்வரன், போஸ், நேதாஜி சிவா, ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், கள் விற்பனை செய்ய பக்கத்து மாநிலங்களில் அனுமதி உள்ளது போல் அனுமதி வழங்க வேண்டும். அடுத்த கட்ட போராட்டமாக பனை, தென்னை மரங்களில் கள் இறக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.