ADDED : ஆக 08, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கருணை அடிப்படையில் பணிநியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் காசி தலைமை வகித்தார். அரசாணை 33ல் திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறந்த கிராம உதவியாளர்களுக்கு தொகையை வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.