ADDED : ஆக 01, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லிக்கனி தொக்கு தயாரித்தல் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். நெல்லிக்கனி, காய்கறிகளில் அறுவடை பின்சார் தொழில்நுட்பம், தொக்கு தயாரித்தல் குறித்து மனையியல் உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி விளக்கினார். நகர்ப்புறங்களில் ஆடு, கோழி வளர்ப்பு குறித்து கால்நடை டாக்டர் சரவணன் விளக்கினார். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து வேளாண் விரிவாக்க உதவி பேராசிரியை செல்வராணி தெரிவித்தார். விவசாயிகள், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
