UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யூ., சார்பில் உதவிக் கோட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் உச்ச வரம்பை ரத்து செய்ய வேண்டும். 2025-26 ஆண்டுக்கான போனஸ் ரூ.28,440 அறிவிக்க வேண்டும். போனஸ் நாட்களை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்ட தலைவர் வினோத் பாபு, செயலாளர் கார்த்திக் சங்கிலி, உதவித் தலைவர் ஜெய ராஜசேகர், உதவிச் செயலாளர் ஹரிக்குமார், கிளைச் செயலாளர்கள் செந்துார் பாண்டி, லட்சுமண சாமி, கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர்.
