/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாழை தோப்பு வழியாக சதுரகிரி சென்ற பக்தர்கள்
/
வாழை தோப்பு வழியாக சதுரகிரி சென்ற பக்தர்கள்
ADDED : ஆக 05, 2024 05:39 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு சென்றனர்.
சதுரகிரி மலைக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது.
இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்த வள்ளியம்மாள், லாவடி கருப்பசாமி, 18 சித்தர்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
சதுரகிரி மலைக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சதுரகிரியில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழாக்கள் நாட்களே. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக. 1 முதல் 5ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாழை தோப்பு வழியாக சாமியை தரிசிக்க மலை ஏறினர்.
காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.