/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருக்கல்யாணத்தை தரிசித்த பக்தர்கள் பரவசம்
/
திருக்கல்யாணத்தை தரிசித்த பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 22, 2024 05:58 AM

மதுரை, : மதுரையில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி சித்திரை வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வசதிக்காக எல்.இ.டி., திரைகள், நடமாடும் கழிப்பறைகள், மேலசித்திரை வீதியில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தன. கோயில் அருகே பக்தர்கள் வரிசையில் நின்று 'மொய்' செலுத்தினர். இன்று (ஏப். 22) தேரோட்டம் நடக்கிறது.
திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூறியதாவது:
* பேரானந்தம் கிடைத்தது
திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காகவே சென்னையில் இருந்து வந்துள்ளோம். சுவாமி தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்துள்ளோம். பக்தர்கள் பேரானந்தம் அடைய மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டும்.
- சுவாதி பிரியா, சென்னை.
* பல ஆண்டுகளாக வருகிறேன்
பல ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வருகிறேன். இந்தாண்டும் வெயிலை, கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசனம் செய்தேன். இது நான் செய்த பாக்கியமே.
- சித்ரா, மதுரை.
* புதிய அனுபவம்
மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண வேண்டும் என பல ஆண்டுகளாக எதிர்பார்த்தேன். இந்தாண்டு பல ஆயிரம் பக்தர்களுடன் சேர்ந்து தரிசித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சந்தோஷம், மனநிறைவாக உள்ளது.
- மஞ்சுளா, சென்னை.
* வசதிகள் சிறப்பாக இருந்தன
மேலுாரில் இருந்து வந்தோம். அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை அகம்குளிர கண்டு மனமுருகி வேண்டிக் கொண்டோம். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தாலும், போதுமான வசதிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
- மோகனா தேவி, மேலுார்.

