/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோண்டுறாங்க... தோண்டுறாங்க... தோண்டிக் கிட்டே இருக்காங்க... புலம்பும் திருநகர் மக்கள்

ADDED : ஆக 19, 2024 01:17 AM

திருநகர்: பத்தாண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத திருநகர் ரோடுகளை, குழாய்கள், கேபிள் பதிக்க என பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி தோண்டி சிதைக்கின்றனர். எல்லா ரோடுகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
வாகனங்கள் அதிகம் செல்லும் மெயின் ரோடுகள் உட்பட அனைத்து ரோடுகளுமே சேதமடைந்து குண்டும் குழியுமாகத்தான் காட்சியளிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தனியார் நிறுவனங்கள் கேபிள் பதிப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக ரோட்டையொட்டி பள்ளம் தோண்டினர்.
பின்பு மாநகராட்சி சார்பில் முல்லைப் பெரியாறு திட்டத்திற்காக குடிநீர் குழாய்கள் பதிக்க ரோட்டோரம் தோண்டினர். அதன் பின்பு வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்க என்றுகூறி ரோட்டின் குறுக்கே பள்ளம் தோண்டி குழாய் பதித்தனர். ஓரிரு பகுதிகளில் அப்பணிகள் நடந்து வருகிறது.
இப்படி பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை, பணிமுடிந்தபின் முழுமையாக மூடாததால் பள்ளம், மேடாக கிடக்கிறது. குடிநீர் குழாய்க்காக ரோட்டின் நடுவே தோண்டிய பள்ளங்களும் முழுமையாக மூடப்படவில்லை. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் இதில் விழுந்து காயமடைகின்றனர்.
மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்லக்கூட முடியாமல் மனஉளைச்சலுடன் செல்கின்றனர். எப்போதுதான் தோண்டும் பணியை முடிப்பார்கள், எப்போது நல்ல ரோட்டில் பயணிப்போம் என்ற ஏக்கத்தில் திருநகர் மக்கள் உள்ளனர்.