/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ்
/
பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ்
ADDED : செப் 03, 2024 04:47 AM

மதுரை : தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களை மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்காக தினமலர் பட்டம் இதழ், பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களுடன் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. சமூக பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த இதழ்களை நன்கொடையாளர்கள் பெற்று அரசு, உதவிபெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். நேற்று சோலைராஜா நன்கொடையாக வழங்கினார்.
உசிலம்பட்டி சோலை கலை அறிவியல் கல்லுாரி நிர்வாக இயக்குநர் சோலை இளவரசன், பள்ளி இயக்குநர் கவின்குமார், முதல்வர் முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.