ADDED : ஜூன் 16, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிச் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தெரு நாய்கள் எளிதாக வளாகத்தினுள் நுழைந்து சுதந்திரமாக உலா வந்தன. மாணவர்களை துரத்தி அச்சத்தை ஏற்படுத்தின. வளாகம் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர். ஆசிரியர்களும், மாணவர்களும் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
