ADDED : ஆக 28, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை வந்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஏர்போர்ட்டில் நடைபெறும் 'மங்கி பாக்ஸ்' காய்ச்சல் பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தேனி சென்றார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் குமரகுரு உடன் இருந்தார்.
மதுரையில் நேற்று வரை டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. நேற்று முன்தினம் ஆறு பேரும் நேற்று 19 பேரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 60 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.