ADDED : ஜூலை 01, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் நடந்தது.
மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் புரோஸ்கான், நண்பன், சின்னம்மாள், சுமதி முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், கருவிழி, கைரேகை பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புக்கோடி ஏந்தியும் புதிய நடைமுறைகளின் நகலை எரித்தும் கோஷமிட்டனர். தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் ஜீவானந்தம், தனசேகரன் கலந்து கொண்டனர். தாசில்தார் முத்துப்பாண்டியன் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
