/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விடுமுறை எடுக்க செயலி அரசு ஊழியர்கள் அதிருப்தி
/
விடுமுறை எடுக்க செயலி அரசு ஊழியர்கள் அதிருப்தி
ADDED : ஆக 25, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பதை கருவூல கணக்குத் துறையின் களஞ்சியம் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கைவிட கோரி ஆக.,27ல் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலுார் மற்றும் நகரில் அனைத்து அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்த வி.ஏ.ஓ., மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க கலெக்டரை சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

