ADDED : ஜூலை 30, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : பூமி வெப்பமயமாதலை தடுக்கவும், பூமியை குளிர்விக்கவும் மரங்களின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தி மரங்களை அதிகரிக்க விதைப்பந்து தயாரிக்கும் திட்டத்தை மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் மற்றும் உலக மகளிர் இயக்கம் இணைந்து செயல்படுத்துகின்றன.இதற்காக நிறுவன தலைவர் ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் பிரியா, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக செயலாளர் இளவரசன் ஆகியோர் வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் ஆகியோரை சந்தித்தனர்.
அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விதைப்பந்துகளை வினியோகித்தனர்.