ADDED : ஆக 27, 2024 01:27 AM
மதுரை : மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் முதல், இரண்டாவது டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
மதுரைக் கல்லுாரியில் நடந்த முதல் டிவிஷன் லீக் போட்டியில் சன் அணி, ஸ்பார்க் அணியுடன் மோதியது. ஸ்பார்க் அணி 45.5 ஓவர்களில் 183 ரன் எடுத்தது. நந்தகுமார் 62 ரன் எடுத்தார். வாபர் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய சன் அணி 37.3 ஓவர்களில் 162 ரன் எடுத்தது. அர்ஜூன் 64 ரன் எடுத்தார். நந்தகுமார் 3, விஜி 3 விக்கெட் வீழ்த்தினர். ஸ்பார்க் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் நடந்த 2வது போட்டியில் ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி, ப்ரீக் அணிகள் மோதின. ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி 34.3 ஓவர்களில் 107 ரன் எடுத்தது. கார்த்திக்குமார் 30 ரன் எடுத்தார். முகமது தாகீர் 3, முகமது ரபீக் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய ப்ரீக் அணி 35.2 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. ஜான் எபநேசர் 5 விக்கெட் வீழ்த்தினார். ஸ்பார்க் கோல்ட்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நல்லமணி பள்ளியில் நடந்த 3வது போட்டியில் ரைசிங் சன், சச்சின் அணிகள் மோதின.
ரைசிங் சன் அணி 35.5 ஓவர்களில் 150 ரன் எடுத்தது. சரவணன் 31, காளி கருப்பன் 33, செல்லா 37 ரன் எடுத்தனர். ேஷக் தாவூத் 3, ஜோஸ்வா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய சச்சின் அணி 42 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்ச்செல்வம் 42 ரன் எடுத்தார். சரவணன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
டி.வி.எஸ்., பள்ளியில் நடந்த இரண்டாவது டிவிஷன் லீக் முதல் போட்டியில் டி.வி.எஸ்., அபராஜிதா, மெர்க்குரி லெஜன்ட்ஸ் அணிகள் மோதின. டி.வி.எஸ். அபராஜிதா அணி 29.3 ஓவர்களில் 166 ரன் எடுத்தது. பாண்டிமுருகன் 55 ரன் எடுத்தார். சுல்தான் இப்ராஹிம் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய மெர்க்குரி லெஜன்ட்ஸ் அணி 30 ஓவர்களில் 162 ரன் எடுத்தது. விக்னேஷ் 52 ரன் எடுத்தார். அருண் காமராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். டி.வி.எஸ். அபராஜிதா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா, ஓஸன் லெவன் அணிகள் மோதின. டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா அணி 30 ஓவர்களில் 248 ரன் எடுத்தது. சுரேஷ்குமார் 101, இளங்கோவன் 46, ராகவன் 35 ரன்கள் எடுத்தனர்.
ஓஸன் லெவன் அணி 22.2 ஓவர்களில் 114 ரன் எடுத்தது. மோனிஷ் 36 ரன் எடுத்தார். பிரணவ் 3, சந்திரமவுலி 3 விக்கெட் வீழ்த்தினர். டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா அணி 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.