ADDED : செப் 02, 2024 01:22 AM
மதுரை: தேசிய விளையாட்டு தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் எல்லீஸ்நகர் மைதானத்தில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா துவக்கி வைத்தார். போட்டி முடிவுகள்:
முதல் சுற்றில் வாடிப்பட்டி அரசுப் பள்ளி இ அணி 3 - 0 கோல் கணக்கில் மணியஞ்சி அரசுப் பள்ளியை வீழ்த்தியது. கேலோ இந்தியா அணி 5 - 0 கோல் கணக்கில் வாடிப்பட்டி அரசுப் பள்ளி சி அணியை வீழ்த்தியது. வாடிப்பட்டி அரசுப் பள்ளி ஏ அணி 2 - 0 கோல் கணக்கில் பள்ளியின் டி அணியை வீழ்த்தியது. அமெரிக்கன் கல்லுாரி பள்ளி அணி 3 - 0 கோல் கணக்கில் வலையங்குளம் அரசுப் பள்ளியை வீழ்த்தியது. வாடிப்பட்டி அரசுப் பள்ளி பி அணி 4 - 0 கோல் கணக்கில் செயின்ட் பிரிட்டோ பள்ளியை வீழ்த்தியது. கப்பலுார் அரசுப் பள்ளி 3 - 1 கோல் கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ. சி.பி.எஸ்.இ. பள்ளியை வீழ்த்தியது.
காலிறுதிப் போட்டி: திருநகர் இந்திராகாந்தி பள்ளி 8 - 1 கோல் கணக்கில் மணியஞ்சி அரசுப் பள்ளியை வீழ்த்தியது. கேலோ இந்தியா 2 - 0 கோல் கணக்கில் வாடிப்பட்டி ஏ அணியை வீழ்த்தியது. பாண்டியராஜபுரம் அரசுப் பள்ளி 3 - 0 கோல் கணக்கில் கப்பலுார் அரசுப் பள்ளியை வீழ்த்தியது. எஸ்.டி.ஏ.டி. அணி 4 - 0 கோல் கணக்கில் வாடிப்பட்டி பி அணியை வீழ்த்தித.
முதல் அரையிறுதியில் இந்திராகாந்தி பள்ளி 3 - 0 கோல் கணக்கில் கேலோ இந்தியாவை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் வாடிப்பட்டி அணி 3 - 1 கோல் கணக்கில் பாண்டியராஜபுரம் அணியை வீழ்த்தியது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் பாண்டியராஜபுரம் அணி 4 - 2 கோல் கணக்கில் கேலோ இந்தியாவை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் திருநகர் இந்திராகாந்தி பள்ளி 3 - 2 கோல் கணக்கில் வாடிப்பட்டி அரசுப் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கவுன்சிலர் பாமா, வாடிப்பட்டி அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன், பொருளாளர் சாம் ஆனந்தராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.