ADDED : செப் 11, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட நீச்சல் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஏற்பாடுகளை செய்தனர்.
ஆடவர் போட்டி முடிவுகள்
50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் ஹரிஹரன், பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் முகமது இக்பால், பேக் ஸ்ட்ரோக்கில் பவித்ரன், பட்டர்பிளை பிரிவில் ேஹம கார்த்திகேயன் முதலிடம் பெற்றனர்.
100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் குரு பிரசாத், பேக் ஸ்ட்ரோக்கில் சாத்விக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் கவின், பட்டர் பிளை பிரிவில் ேஹமகார்த்திகேயன், 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் கவின், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் குரு பிரசாத் வெற்றி பெற்றனர். இன்று (செப்.11) மகளிர் பிரிவு போட்டிகள் நடக்கின்றன.