நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் அண்ணா பூங்கா வெளிப்பகுதியை சுற்றி நடைமேடையையொட்டி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடப்படாமல் இருந்தது.
இதனால் நடைமேடையில் வாக்கிங் செல்வோர், ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் ரோட்டில் விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியானது. பள்ளங்களில் கான்கிரீட் அமைத்து சீரமைக்கப்பட்டது.