/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் ஆக்கிரமிப்பை அகற்ற தி.மு.க., அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு; ரோடு விரிவாக்கப் பணிகள் பாதிப்பு

ADDED : மே 21, 2024 06:51 AM
மதுரை : மதுரை பழங்காநத்தம் முதல் திருநகர் பகுதி வரை 6 கி.மீ., தொலைவுக்கு ரோடு விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. ரூ.40 கோடி மதிப்பில் தற்போதுள்ள ரோட்டில் சென்டர் மீடியன், இருபுறமும் மழைநீர் கால்வாய்கள், நடைபாதை என ரோடு அமைய உள்ளது. இதற்கான பணி நடந்து வருகிறது.
இதற்காக ரோட்டின் இருபுறமும் சர்வே செய்து நெடுஞ்சாலைத் துறையின் இடம் குறியீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் பலவும் அகற்றப்பட்டன. பல இடங்களில் பயணியர் நிழற்குடை, கடைகள், வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆங்காங்கே மழைநீர், கழிவுநீர் முறையாக வடிந்து செல்ல சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆளுங்கட்சியான தி.மு.க.,வினரும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.,வினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திருநகர் ஒன்றிய அலுவலகம் பகுதியில் ரோட்டோரம் ஒரு வணிகவளாகம் உள்ளது. இது நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதால் விரிவாக்கப் பணிக்காக அகற்ற பலமுறை நோட்டீஸ் கொடுத்து விட்டனர். ஆனால் ரோடு பணிகள் துவங்கி பலமாதங்களாகியும் அதனை அகற்றுவதாக தெரியவில்லை.
இதனை அகற்ற எதிர்ப்பு தெரிவிப்போருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி ஆண்ட கட்சியினரும் கூட்டணி சேர்ந்து செயல்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் ரோடு விரிவாக்கப் பணி தாமதமாகிறது. அதையடுத்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால நெடுஞ்சாலைத் துறையினர் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.