/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது வினியோகத்தில் தி.மு.க., அரசு தோல்வி: உதயகுமார் குற்றச்சாட்டு
/
பொது வினியோகத்தில் தி.மு.க., அரசு தோல்வி: உதயகுமார் குற்றச்சாட்டு
பொது வினியோகத்தில் தி.மு.க., அரசு தோல்வி: உதயகுமார் குற்றச்சாட்டு
பொது வினியோகத்தில் தி.மு.க., அரசு தோல்வி: உதயகுமார் குற்றச்சாட்டு
ADDED : ஆக 09, 2024 01:11 AM
திருமங்கலம் : ''பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு முறையாக பொருட்களை வழங்க இயலாமல் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
திருமங்கலம் ஒன்றியம் திரளி ஊராட்சியில் நேற்று கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தமிழரசன், தவசி, மாணிக்கம், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய தலைவர் லதா, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதயகுமார் பேசும்போது, ''தி.மு.க., அரசு பொது வினியோக திட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சீனி வழங்கப்படுகிறது. 5 கிலோ கோதுமை வழங்கிய குடும்ப அட்டைகளுக்கு, தற்போது ஒரு கிலோ தான் வழங்கப்படுகிறது. அதுவும் தரம் இன்றி உள்ளது. பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரிசி துர்நாற்றம் வீசுகிறது. கோழிகள் கூட சாப்பிட மறுக்கின்றன என்றார்.