/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எல்லா வகையிலும் துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு பா.ஜ., வேட்பாளர் ராமஸ்ரீநிவாசன் தாக்கு

ADDED : ஏப் 08, 2024 04:24 AM

மதுரை : 'லஞ்சம், ஊழல், உரிமைத் தொகையில் ஏமாற்றம் என எல்லா வகையிலும் துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு'' என, மதுரை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமஸ்ரீநிவாசன் பேசினார்.
மதுரை தொகுதியில் நேற்று மாலை அவர் எஸ்.எஸ்.காலனி பகுதியில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராக வெற்றியடையச் செய்தால் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும். இப்போது ஆளும் கட்சியின் அராஜகம், லஞ்சம், ஊழலில் சிக்கி தமிழ்நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீட்கும் கட்சியாக பா.ஜ., போட்டியிடுகிறது.
பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக சொல்லி விட்டு, இப்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் தொகை வழங்கப்படும் என்று ஓட்டு கேட்கிறது தி.மு.க., வீட்டுக்காரர்களிடமிருந்து டாஸ்மாக் மூலம் அதை திரும்ப பெற்று விடலாம் என்ற நோக்கத்தில்தான் அப்படி சொல்கின்றனர். எல்லா வகையிலும் மக்களுக்கு துரோகம் செய்யும் அரசாக தி.மு.க., செயல்படுகிறது.
மதுரையில் புதிய தொழில் முதலீடுகள் கொண்டு வரும் அளவுக்கு இங்கு ஆட்சி செய்வோருக்கு அடிப்படை அறிவு இல்லை. மதுரை மிகவும் பின்தங்கி கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் மேலும் பின்தங்கும்.
இதனால் வேலை இல்லாமல் வெளியூருக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மதுரையை தொழில் நகரமாக மாற்றுவோம் என்கிறோம். அந்த மாற்றத்தைக் கொண்டு வர எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.