/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு எம்.பி., தங்கப்பரிசு
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு எம்.பி., தங்கப்பரிசு
ADDED : செப் 01, 2024 04:50 AM

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி நகர், ஒன்றிய பகுதிகளில், தேனி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், உசிலம்பட்டி ஒன்றியச்செயலாளர்கள் பழனி, முருகன், அஜித்பாண்டி, செல்லம்பட்டி முத்துராமன், சுதாகரன், செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.
அதிக ஓட்டுகள் வாங்கிக் கொடுத்த தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கு இரண்டு பவுன் தங்க கைச்செயினும், உசிலம்பட்டி, சேடப்பட்டி, செல்லம்பட்டி, ஒன்றியங்களில் 8 செயலாளர்கள், உசிலம்பட்டி நகர், எழுமலை பேரூர் கழக செயலாளர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.