/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிகரெட் புகைப்பவரால் கருவில் உள்ள சிசுவும் பாதிக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் எச்சரிக்கை

ADDED : மே 30, 2024 03:48 AM
மதுரை: ''கணவன் புகைபிடிப்பதால் மனைவி, கருவில் உள்ள சிசுக்கும் கூட புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்'' என மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நுரையீரல் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் வேல்குமார், மருத்துவ புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம், கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ண குமார், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கண்ணன் கூறிய தாவது: புகையிலை நிறுவனங்கள் இளையோர்களை குறிவைத்து வணிகம் செய்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விளையாட்டாக ஆரம்பித்து சிகரெட்டிற்கு அடிமையாகின்றனர். கஞ்சா போன்ற போதைக்கு எளிதில் அடிமையாகின்றனர்.
30 வயதில் அவர்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது. இந்தாண்டுக்கான உலக புகையிலை ஒழிப்பு தின உட்பொருள், 'புகையிலை தொழில் குறுக்கீட்டிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்' என்பதே.
புகையிலை பயன்பாடு உலகளவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பேர் புகை பிடிப்பது தொடர்பான நோயால் இறக்கின்றனர். புகை பிடிப்போரால் அருகில் இருப்போருக்கும் ஆஸ்துமா, காசநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்தால் குணப்படுத்த முடியும்.
கணவன் புகைபிடிப்பதால் மனைவி, கருவில் உள்ள சிசுக்கும் கூட புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். எனவே ஆண்டுதோறும் 'ஸ்கிரீனிங் டெஸ்ட்' செய்வது கட்டாயம் என்றனர்.