ADDED : ஜூலை 29, 2024 12:38 AM

கொட்டாம்பட்டி : வெள்ளமலைபட்டியில் சிறுவர்களை கடித்துக் குதறும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளமலைபட்டி விநாயகர் கோயில் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வெறிபிடித்து சுற்றித் திரிகின்றன. நேற்று காலை வீட்டு வாசலில் போலீஸ்காரர் நமச்சிவாயம் தனது வீட்டு வாசலில் ஒன்றரை வயது மகளுடன் நின்றிருந்தார்.
அப்போது வந்த தெரு நாய்கள் சில சிறுமியை கடித்து இழுத்து சென்றன. அதிர்ந்துபோன நமச்சிவாயம் அந்நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றினார். இதில் குழந்தையின் உடல் முழுவதும் காயமேற்பட்டது.
ஏற்கனவே இதே பகுதியில் கவின் 7, உள்ளிட்ட பல சிறுவர்களை நாய் கடித்ததில் காயம் ஏற்பட்டதும் மதி மற்றும் கருப்பையாவிற்கு சொந்தமான ஆடுகளை கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்தன. அதனால் மக்கள் விட்டை விட்டு வெளியேறாமல் அச்சத்துடன் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். ஊராட்சித் தலைவர் முருகேசன் கூறுகையில், சட்டத்திற்குட்பட்டு நாய்களை பிடிக்க, கருத்தடை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.