/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவ கட்டமைப்பு குறித்து முதல்வர் பொய் கூறலாமா டாக்டர் சரவணன் கேள்வி
/
மருத்துவ கட்டமைப்பு குறித்து முதல்வர் பொய் கூறலாமா டாக்டர் சரவணன் கேள்வி
மருத்துவ கட்டமைப்பு குறித்து முதல்வர் பொய் கூறலாமா டாக்டர் சரவணன் கேள்வி
மருத்துவ கட்டமைப்பு குறித்து முதல்வர் பொய் கூறலாமா டாக்டர் சரவணன் கேள்வி
ADDED : மார் 05, 2025 05:46 AM
மதுரை: ''முதல்வர் ஸ்டாலின் ஒரு விழாவில் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதற்கு கருணாநிதி உருவாக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்பு தான் காரணம். தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு உலகளவில் அனைவரும் பாராட்டும் வகை உள்ளது என்று மிகப்பெரிய பொய் மூடையை அவிழ்த்து விட்டார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அதிகளவில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை உருவாக்கி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக பொதுச்செயலாளர் பழனிசாமி திகழ்ந்தார். மதுரையில் 223 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மூலம் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தவிர 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கினார். 167 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தினார். 2000 அம்மா மினி கிளினிக்களை உருவாக்கி சரித்திரம் படைத்தார். உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து ஆறு முறை இந்தியளவில் தமிழகம் சாதனை படைத்து விருது பெற்றது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடை பழனிசாமி கொண்டு வந்தார். இதன் மூலம் இதுவரை 3566 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கின்றனர். பழனிசாமி ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டது.
ஆனால் தி.மு.க., ஆட்சியில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. 4 ஆண்டுகளில் தமிழகத்தின் சுகாதாரத்துறை 7வது இடத்திற்கு பின்னோக்கி சென்று விட்டது. இந்த 4 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரிகூட ஸ்டாலின் அரசு உருவாக்கவில்லை. காலியான மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால் உலக அளவில் பாராட்டும் வகையில் மருத்துவ கட்டமைப்பு உள்ளது என்று முதல்வர் பொய் கூறலாமா. இவ்வாறு கூறினார்.