தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கால்வாய்களில் துார்வாரும் பணி

கால்வாய்களில் துார்வாரும் பணி

கால்வாய்களில் துார்வாரும் பணி


ADDED : மார் 12, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை மாநகராட்சியின் நுாறு வார்டுகளில் தினமும் ஒரு வார்டை தேர்வு செய்து முக்கிய ரோடு, தெருக்கள், பாலங்கள், ரவுண்டானாவில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்கால்கள், கால்வாய்கள், நீர்நிலைகளில் துார்வாரும் பணிகள் நடக்கிறது.

இதையொட்டி மண்டலம் 2 ல் தல்லாகுளம் உலக தமிழ்ச்சங்கம் ரோட்டில் கரும்பாலை முதல் வக்புவாரிய கல்லுாரி வரையான தண்டலை வாய்க்காலில் 80 மீ.,க்கும், மண்டலம் 4 பகுதி அனுப்பானடி பகுதி சொட்டதட்டி வாய்க்காலில் 25 மீ., தொலைவுக்கும் துார் வாரப்பட்டது. இதுபோன்ற பணிகள் அனைத்து வாய்க்கால்களிலும் நடைபெற உள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us