ADDED : ஆக 01, 2024 05:04 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயிலில் டி.ஆர்.இ.யூ., சி.ஐ.டி.யூ., சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் ஆன்ட்ரன் முன்னிலை வகித்தார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், 3 லட்சம் ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்புதல், ரயில்வே, எல்.ஐ.சி., உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுத்தல், 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட இணைச் செயலாளர் சங்கரநாராயணன், அனைத்திந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர் சங்க செயலாளர் ஜீவா, புனலுார் கிளை தலைவர் நிஜாமுதீன், தட்சிண ரயில்வே ஓய்வூதிய சங்கம் (டி.ஆர்.பி.யூ.,) தலைவர் கல்யாணசுந்தரம், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் ஹரிகுமார் நன்றி கூறினார்.