/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் வீணாகுது குடிநீர்
/
திருப்பரங்குன்றத்தில் வீணாகுது குடிநீர்
ADDED : மார் 02, 2025 04:49 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியன் நகர், பாலாஜி நகர், திருநகர் பகுதி குடியிருப்புகளுக்கு பெரியாறு குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு வீடுகளில் மீட்டர் பொருத்தாமல் குழாய்கள் காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குழாய்களுக்கு மூடி இல்லை.
சில நாட்களாக இத்திட்டத்தில் சோதனைக்காக குடிநீர் திறக்கப்படுகிறது. மூடிகள் இல்லாத குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் வீணாகிறது. இவ்வாறு தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. குழாய்களில் முறையாக மூடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.