/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மறுபதிவுக்கு பழைய ஆவணங்களை கேட்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்
/
மறுபதிவுக்கு பழைய ஆவணங்களை கேட்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்
மறுபதிவுக்கு பழைய ஆவணங்களை கேட்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்
மறுபதிவுக்கு பழைய ஆவணங்களை கேட்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஏப் 27, 2024 04:45 AM
மதுரை: ''வாகனங்கள் தகுதிச்சான்று, மறுபதிவுக்கு செல்லும்போது ஆரம்ப காலம் தொட்டு ஆவணங்களை கேட்பதால் வாகன உரிமையாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) வாகன பதிவு, வாகனங்களுக்கு தகுதிச்சான்று, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றுக்காக பொதுமக்கள் செல்கின்றனர். இவர்களில் பலர் பழைய வாகனங்களை இரண்டாவதோ, மூன்றாவதாகவோ வாங்குகின்றனர்.
வாகன பதிவு உரிமையை தங்கள் மாற்றம் செய்யும்போது முந்தைய உரிமையாளர் விண்ணப்பத்தில் தேவையான இடங்களில் கையெழுத்திட்டு கொடுப்பார். வாகனம் வாங்குபவர் அவ்விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தி, தேவையான ஆவணங்களை இணைத்து தனது பெயருக்கு வாகனப் பதிவை மாற்றிக் கொள்வார்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகனத்தின் முந்தைய பதிவு ஆவணங்களை சரிபார்த்து மாற்றிக் கொடுத்துவிடுவர். இந்த நடைமுறைதான் அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் உள்ளது. ஆனால் மதுரை மத்திய அலுவலகத்தில் வாகன தகுதிச் சான்று பெறும்போதும், 3வது அல்லது 4வது உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யும்போதும், ஆரம்பகால வாகன பதிவுச் சான்றையும் வழங்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே அவற்றை சரிபார்த்துதான் தகுதிச்சான்று, மறுபதிவு சான்று வழங்கி இருப்பர். அப்படி இருந்தும் 15 ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஆவணங்களையும் கேட்பதால் அவை இல்லாத வாகன உரிமையாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆர்.டி.ஓ., சித்ராவிடம் கேட்டபோது, ''ஏதாவது பிரச்னை, சந்தேகம் இருந்தால் மட்டுமே பழைய ஆவணங்களை கேட்பர். மற்றபடி பழைய ஆவணங்கள் தேவையில்லை'' என்றார்.

