ADDED : ஆக 05, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: துபாயில் இருந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு காலை 11:10 மணிக்கு மதுரை விமான நிலையம் வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த விமானத்தில் மதுரைக்கு வரவேண்டிய 170 க்கும் மேற்பட்ட பயணிகள் துபாய் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அந்த விமானம் இன்று அதிகாலை 1:30 மணிக்கு மதுரை வந்தடையும் என்றும், இந்த கால தாமதத்தை மதுரையில் இருந்து துபாய்க்கு அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளுக்கு அறிவித்து விட்டதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பயணிகள் நிலையத்திற்கு வருவார்கள் என்றும் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.