ADDED : மே 28, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : துபாய் - மதுரை இடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்கும் விமானம் அடிக்கடி தாமதமாக வருவதும், திடீரென ரத்து செய்யப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
துபாயில் இருந்து மதுரை வரவேண்டிய விமானம் நேற்று முன்தினம்(மே 26) தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதற்கான மாற்று விமானம் நேற்று 10 மணி நேரம் தாமதமாக இரவு 9:00 மணிக்கு மதுரை வந்தடைந்து. மதுரையிலிருந்து 189 பயணிகளுடன் துபாய்க்கு இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு சென்றது.