தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்


ADDED : ஜூலை 16, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியைகள் மாலா, மெர்சி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி, ஆசிரியப் பயிற்றுனர் மஞ்சுளா பேசினர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நுார்முகமது முன்னிலை வகித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பிரியதர்ஷினி, நிலோபர் நிஷா, பிரேமா, நுாறு சதவீதம் தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். ஆசிரியை பெல்சியா மேரி தொகுத்து வழங்கினார்.

திருஞானம் துவக்கப் பள்ளியில் சுரேந்திரன் தலைமை வகித்தார். சங்கமம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார். செயலாளர் சங்கீத்ராஜ் பரிசு வழங்கினார். மாணவ மன்ற தலைவர் மதுமிதா நன்றி கூறினார்.

எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தென்னவன் வரவேற்றார். ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். மாற்றம் தேடி நல அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் பாலமுருகன், ஞானசிகாமணி கல்வி உபகரணங்கள் வழங்கினர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

ஞானஒளிவுபுரம் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி விழாவில் மன்றங்கள் துவக்க விழா நடந்தது. தாளாளர் லுாயிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோசப் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் மரியஅருள்செல்வம் வரவேற்றார். சதங்கை கலை தொடர்பு மைய இயக்குனர் அலெக்ஸ் ஞானராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மாணவர் இலக்கியன் காமராஜர் குறித்து பேசினார். மாணவர் சுதானந்தன் தொகுத்தளித்தார். கலைஇலக்கிய கழக செயலாளர் மைக்கேல்மாறன் நன்றி கூறினார்.

பீபீகுளம் முல்லைநகர் தனபால் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தினேஷ்சேவியர் முன்னிலை வகித்தார். ஆசிரியை உஷா வரவேற்றார். ஆசிரியை ஜீவா தொகுத்து வழங்கினார். ஆசிரியை அஜிதா நன்றி கூறினார். பழங்காநத்தம் விசாகன் சி.பி.எஸ்.இ., பள்ளி விழாவில் தாளாளர் பாகிரதி தலைமை வகித்தார்.

கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் 'மழை போன்ற வாழ்க்கை' என்ற தலைப்பில் காமராஜர் பற்றி பேசினார். முன்னாள் நீதிபதி உதயன் உள்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் ஜெயந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலத்துறை சார்பில் பேராசிரியர் வேளாங்கண்ணி ஜோசப் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். சிண்டிகேட் உறுப்பினர் புஷ்பராஜ், துணைப் பதிவாளர் முத்தையா, பேராசிரியர்கள் ராஜ்குமார், ராமகிருஷ்ணன், இயமவர்மன், முத்துராஜ், அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, சங்கர், முருகன் பங்கேற்றனர். அவனியாபுரம் எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி விழாவில் செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி தலைமை வகித்தார். தாளாளர் அபர்ணா, செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி விழாவில் பள்ளிகளின் முதல்வர் லதா திரவியம் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாணவி ஜனஹம்சினி வரவேற்றார். இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவர் சண்முகத் திருக்குமரன், தலைமையாசிரியர் அனிதா கரோலின் பங்கேற்றனர். மாணவிகள் கங்காதரணி, ஹரிணி தொகுத்து வழங்கினர். மாணவி சங்கியா நன்றி கூறினார்.

வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விழாவில் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமமூர்த்தி வரவேற்றார். மரக்கன்று நடுதல், மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா, துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், பி.ஆர்.ஓ., பிரெட்ரிக் பங்கேற்றனர். பேராசிரியர்கள் கார்த்திகைச் செல்வம், செல்வம் ஏற்பாடுகளைச் செய்தனர். விரகனுார் கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி விழாவில் முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் சகாதேவன், என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

செல்லுார் மனோகரா நடுநிலைப்பள்ளி விழாவில் குறிஞ்சிமலர் லயன்ஸ் கிளப் கவர்னர் சண்முகசுந்தரம், தாளாளர் பால் ஜெயக்குமார் மற்றும் செல்வம், சவுந்தர்ராஜன், மைதீன் பாட்ஷா இணைந்த கைகள் சமூக சேவை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்


சவுராஷ்டிரா கல்லுாரி தமிழ்த்துறை, என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த விழாவில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் குபேந்திரன் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்து பேசினார். 'பண்பின் பெட்டகம் காமராஜர்' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கினர். பேராசிரியர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.

ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் காமராஜர் படத்திற்கு தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் அண்ணாமலை இனிப்பு வழங்கினார்.

விளாச்சேரியில் கிராம இளைஞர் மன்றம் துவக்கவிழா, கல்வி வளர்ச்சி விழா, விளையாட்டு விழா ஆகியவை நடந்தது. ஆசிரியர் சிவசரவணன் தலைமை வகித்தார். அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை நிறுவனத் தலைவர் கண்ணன் வரவேற்றார். முகம்மது அஜ்மல்கான் தொகுத்துரைத்தார். தாசில்தார் செந்தாமரைவள்ளி, கூடுதல் கலால் அலுவலர் ஆனந்தி, போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் சரவணன் பரிசு வழங்கினர். பேராசிரியர் மணிவண்ணன் பேசினார். விஜய் நன்றி கூறினார்.

சோழவந்தான்


காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். தாளாளர் பென்சாம் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைவாணி வரவேற்றார். முன்னாள் ரானுவ வீரர் பால்சிங் கொடி ஏற்றினார். பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். எம்.வி.எம்., மெட்ரிக் பள்ளி விழாவிற்கு தாளாளர் மருது பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தார். முதல்வர் செல்வம் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையில் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ்,பேரூராட்சி தலைவர் ஜெயராமன்,பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், அவைத்தலைவர் தீர்த்தம், பொருளாளர் கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். காங்., சார்பில் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வட்டார தலைவர் பழனி நிர்வாகிகள் ரவி, சுதந்திரம் மாலை அணிவித்தனர். பா.ஜ.,மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். லயன்ஸ் கிளப் மூத்த நிர்வாகி செல்லப்பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். கிளப் தலைவர் இளஞ்செழியன்,செயலாளர் மகேந்திரன் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி


டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஞானமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம் 'கர்மவீரர் காமராஜர்' என்ற தலைப்பில் பேசினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரங்கநாயகி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் பள்ளியில் தலைவர் அருணாச்சல வேல்பாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவாஜி, செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இந்து நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் கணேசன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் கலந்து கொண்டனர். காமராஜர் சிலைக்கு காங்., தலைவர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, முருகன், வட்டார தலைவர் காந்திஜி, துணைத் தலைவர் சந்திரசேகர் பங்கேற்றனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் பார்த்திபன் தலைமையில் செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தனர்.

பேரையூர்


டி.கல்லுப்பட்டி லார்ட் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். முதல்வர் சந்திரா இனிப்பு வழங்கினார். எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தலைமை வகித்தார். அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தழகு தலைமை வகித்தார்.

உசிலம்பட்டி


நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை அலுவலகத்தில் தலைவர் நடராஜன், செயலாளர் வள்ளிநாயகம், உறுப்பினர்கள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் சிலைக்கு எம்.எல்.ஏ., அய்யப்பன், தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் மாலை அணிவித்தனர். பா.ஜ., நகர் தலைவர் பிரசாத்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வீரபிரபாகரன், நிர்வாகிகள் தீபன்முத்தையா, சவுந்திரபாண்டியன், ரெஜினாமேரி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பொன்கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். தர்மவித்யாபவனில் தலைமை ஆசிரியர் மேகலா தலைமையில் பலரும் பங்கேற்றனர். சின்னக்கட்டளை பாரதியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜா தலைமையில் மரியாதை செலுத்தினர். எழுமலை விஸ்வ வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பாண்டியன், நிர்வாகிகள், முதல்வர் அருண்குமார் பங்கேற்றனர். ஆசிரியை கீர்த்தனா நன்றி கூறினார்.

திருமங்கலம்


பி.கே.என்., கல்வி குழுமம் சார்பில் ஊர்வலம் நடந்தது. பி.கே.என்., வித்யாலயா சங்க கமிட்டி செயலாளர் செல்வம், தலைவர் சக்கரவர்த்தி, பொருளாளர் ஜெய பாண்டியன் தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ஆண்கள் பள்ளி நிகழ்ச்சியில் தலைவர் சிவக்குமார், செயலாளர் பார்த்திபன், பொருளாளர் நவநீதன், தலைமை ஆசிரியை ஜெய சாந்தினி, பெண்கள் பள்ளியில் தலைவர் சுரேஷ் கண்ணா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மணிகண்டன், தலைமையாசிரியை குருவம்மாள் தங்க ரதி பங்கேற்றனர்.

மெட்ரிக் பள்ளி விழாவில் தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் தீபன் ராஜ், முதல்வர் சுமதி பங்கேற்றனர்.

கல்லுாரி நிகழ்ச்சியில் தலைவர் தினேஷ், செயலாளர் மோகன், பொருளாளர் மணிசங்கர், முதல்வர் கணேசன் பங்கேற்றனர். சி.பி.எஸ்.சி., வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் தலைவர் விஜயதர்ஷன், செயலாளர் ஆனந்த்குமார், பொருளாளர் அண்ணாமலை, முதல்வர் காருண்யா சந்திரகலா கலந்து கொண்டனர். ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள் ஞானராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை மார்ஜெரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us