ADDED : ஜூலை 16, 2026 07:43 PM
மதுரை: மதுரை ராஜாக்கூர் எம்.பி.எப்., பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். பள்ளித் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். முதல்வர் உதயபிரபா வரவேற்றார். சமூகநல ஆர்வலர் அவனிமாடசாமி காமராஜர் சாதனை குறித்து பேசினார். தலைமைச் செயல் அலுவலர் செந்தில்ராஜா, இயக்குனர் சுமதி பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
* பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளிக் குழுத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். த.மா.க., மாவட்ட தலைவர் பாண்டி, வட்டாரத் தலைவர் ரமேஷ், மாநில பொதுச் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாணவர்களுக்கு நோட், புக் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் ஒருங்கிணைத்தார். ஆசிரியர் ராஜா செல்வம் நன்றி கூறினார்.
* பரவை பவர் ஹவுஸ் எம்.டி.எஸ்., துவக்கப்பள்ளி விழாவில் பள்ளிக் குழுத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் அசோக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சீதாராமன் வரவேற்றார். தங்கப்பாண்டி எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். தமிழ்நாடு காமராஜர் தொண்டர் படை நிர்வாகி ராஜதுரை, த.வெ.க., நிர்வாகிகள் ராஜ், கண்ணன் பங்கேற்றனர்.
