ADDED : ஜூலை 16, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: பாலமேடு அருகே சுக்காம்பட்டியில் 100 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியினர் பொதுப்பணித்துறை கண்மாய் கரையோரத்தை மயானமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். நேற்று உயிரிழந்த பெண் உடலை எரித்தபோது பொதுப்பணி துறையினர் மயானமாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் அலங்காநல்லுார் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பாலமேடு போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
