ADDED : ஜூன் 11, 2026 04:10 PM
மதுரை: தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் மதுரை நகர் கிளை அறக்கட்டளை சார்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிளைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், அறக்கட்டளை செயலாளர் பூமிநாதன், பொருளாளர் சுந்தரஅழகர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் யோகநாதன், துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ஆதிஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். த.வெ.க., எம்.எல்.ஏ., கோபிசன் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்குவது, மின்உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழக அரசு ஆன்லைனில் மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
