sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'சாய்ஸ் பில்லிங்'கில் அதிக எண்ணிக்கையில் கல்லுாரிகளை பதிவு செய்யுங்கள்

/

'சாய்ஸ் பில்லிங்'கில் அதிக எண்ணிக்கையில் கல்லுாரிகளை பதிவு செய்யுங்கள்

'சாய்ஸ் பில்லிங்'கில் அதிக எண்ணிக்கையில் கல்லுாரிகளை பதிவு செய்யுங்கள்

'சாய்ஸ் பில்லிங்'கில் அதிக எண்ணிக்கையில் கல்லுாரிகளை பதிவு செய்யுங்கள்


UPDATED : ஜூலை 15, 2024 06:50 AM

ADDED : ஜூலை 15, 2024 06:12 AM

Google News

UPDATED : ஜூலை 15, 2024 06:50 AM ADDED : ஜூலை 15, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''இன்ஜினியரிங் கலந்தாய்வில் கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் தேர்வு செய்வதற்கான விருப்ப பதிவில் (சாய்ஸ் பில்லிங்) அதிக எண்ணிக்கையிலான கல்லுாரிகளை தேர்வு செய்து பதிவு செய்யுங்கள்,'' என, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருேஷாத்தமன் தெரிவித்தார்.

தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடர்பாக தினமலர் வழிகாட்டி 2024 நிகழ்ச்சி காலை சிவகாசியில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கம்மவார் திருமண மண்டபத்திலும், மதியம் மதுரையில் தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலிலும் நடந்தன.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின், கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ், சிவகாசி பி.எஸ்.ஆர் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மாரிச்சாமி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கினர்.

நிபுணர்கள் பேசியதாவது:

அதிக கல்லுாரிகளை பதிவு செய்யுங்கள்


புருேஷாத்தமன், செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ.,): தற்போது கலந்தாய்வுக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் சுற்றில் 25,654 மாணவர்கள் அழைக்கப்படுவர். ஜூலை 29 ல் 'சாய்ஸ் பில்லிங்' துவங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே தேர்வு செய்ய விரும்பும் கல்லுாரிகள், பாடப்பிரிவுகள், கல்லுாரி கோடு உள்ளிட்ட விருப்பப் பட்டியலை தயார் செய்துகொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையில் கல்லுாரிகளையும், பாடப்பிரிவுகளையும் சாய்ஸ் பில்லிங்கில் பதிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

கல்லுாரிகள் பெயர் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் குழப்பத்தை தவிர்க்க கல்லுாரி கோடுகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். விருப்ப பட்டியலை 3 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும். தற்காலிகமாக ஒதுக்கீடு தேர்வு செய்வதற்கான 'கன்பார்ம் ஆர்டர்' பெற்று கல்லுாரிகளில் சேர்வது முக்கியம். 'அக்சப்ட் அன்ட் அப்லோடு' அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் டி.என்.இ.ஏ., இ சேவை மையங்களுக்கு சென்று தீர்வு பெறலாம். தமிழ் வழியில் படித்து 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

அனைத்து பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு உறுதி


ஸ்ரீராம், தலைவர், சென்னை இஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: தினமலர் நாளிதழுடன் இணைந்து மாணவர்கள் நலன் கருதி 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். ஏராளமான மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பலன் அடைந்து வருகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் சேரும் 90 சதவீதம் பேருக்கு எவ்வளவு சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஐடியா இல்லை.

இன்ஜினியரிங் கல்வி வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதில் நம்பிக்கை வேண்டும். 2010க்கு பின் 2024 ல் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அறிவு, திறமை, பாடத்திட்டம், வேலை வாய்ப்பு ஆகிய திறமைகள் மாணவர்களுக்கு மிக அவசியம். இவற்றை மையப்படுத்தியே நாங்கள் பாடத்திட்டங்களை வழங்குகிறோம்.

இத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 'கோடிங்' மட்டுமல்ல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறமையும் அதிகம் வேண்டும். தற்போது ஸ்டார்ட் அப் துறைகளிலும் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. உலகில் நாம் சிந்திக்கும் திறன் உள்ள வளமான நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறுபவர்களாக உருவாக்கவும், அதற்கான திறமைகளை மேம்படுத்திடவும் இலக்குகள் நிர்ணயிக்கிறோம்.

பொறியியல் படிப்பின் 4 ஆண்டுகளில் முதல் 2 ஆண்டுகள் அடிப்படை பாடம், மூன்றாம் ஆண்டில் பல்வகை தகவல் தொடர்பு திறன், செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புக்கான கூடுதல் தொழில்நுட்பங்களை வரையறுத்தது கற்றுத்தருகிறோம். படிக்கும்போதே ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பெற்று விடுகின்றனர். வெளிநாட்டு பல்கலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக்கி வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

படிப்புடன் ஒழுக்கம் அவசியம்


அஸ்வின், கல்வி ஆலோசகர்: திறமை, பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் திறனுக்கு ஏற்ப நிறுவனங்கள் சம்பளம் வழங்குகின்றன. சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது முக்கியம். கடந்தாண்டு 4.23 தேர்ச்சி சதவீதம் உள்ள கல்லுாரியில் 194 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர் சேர்க்கையாகியுள்ளார். இதுபோல் தேர்ச்சி சதவீதம் மிக குறைவாக உள்ள கல்லுாரிகளை அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சேர்ந்துள்ளது அவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமையை தெளிவாக காட்டுகிறது. இந்தாண்டு அதுபோல் எந்த பெற்றோரும், மாணவர்களும் ஏமாந்து விட வேண்டாம். திறமைகளை அதிகம் கற்றுத்தரும் கல்லுாரிகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முதல், இரண்டாம் ஆண்டுகளிலேயே கம்பெனிகள் எதிர்பார்க்கும் கூடுதல் திறமைகளை கற்றுக்கொடுக்கம் கல்லுாரிகளை தேடுங்கள். இங்கு ஜெயித்தவர்களின் கதையை மட்டுமே கேட்க தயாராக உள்ளனர்.

பொறியியல் கல்வி என்பது வளமான வாழ்க்கைக்கான பணத்தை சட்டை பாக்கெட்டில் வைக்கப்போகும் கருவி. அதை முறையாக தேர்வு செய்ய வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கு இந்தியன் இன்ஜினியரிங் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.,) போன்ற தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும். ஐ.இ.எஸ்., முடித்தால் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை சம்பளம் பெறலாம். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். அதுபோல் 'கேட்' தேர்வு மூலம் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு காத்திருக்கின்றன. நன்றாக படிப்பதுடன் ஒழுக்கமாக மாணவர்கள் இருப்பதும் அவசியம். கலந்தாய்வில் பங்கேற்று கல்லுாரியை தேர்வு செய்து வளமான வாழ்க்கைக்கு அடித்தளமிடுங்கள். வெளியூர்களுக்கு சென்று படித்தால் மாணவர்கள் கெட்டு போய் விடுவர் என்ற பெற்றோரின் எண்ணத்தை கைவிடுங்கள்.

கல்லுாரிகளுக்கு முன்னுரிமை


சுப்புராஜ், தலைவர், கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன் மாணவர் சேர்க்கை பிரிவு: கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சைபர் செக்கியூரிட்டி போன்ற படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் பொதுவாக 25 சதவீதம் மட்டுமே மாற்றம் இருக்கும். ஆனால் வேலைவாய்ப்பு என்பது இப்படிப்புகளுக்கு பொதுவாக தான் இருக்கும். பாடத்திட்டத்துடன் கூடுதல் திறமைகள், வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் செயல்படும் தகுதியான கல்லுாரிகளை தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு தேவை 40 சதவீதம் சப்ஜெக்ட் என்றால் 60 சதவீதம் மாணவர்களின் தனித்திறமைகள் தான் தேவையாக இருக்கும். தற்போது நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகம். அதற்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

குறைந்த செலவில் தரமான உயர்கல்வி


மாரிச்சாமி, முதல்வர், சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி: தொலைதுார நகரங்களுக்கு சென்று படிக்க பொருளாதார வசதி இல்லாத மாணவர்களும் சிறந்த முறையில் உயர்கல்வி பெறுவதற்கு எங்கள் கல்வி நிறுவனம், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செயலாற்றுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் எங்கள் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை எங்கள் கல்லுாரியில் பெறலாம். இங்கு பயிலும் மாணவர்கள் சர்வதேச, தேசிய அளவிலான கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் பெறுகின்றனர்.

இவ்வாறு பேசினர்.

இந்நிகழ்ச்சியை கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து வழங்கின.






      Dinamalar
      Follow us