நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் - செல்வமீனாட்சி கோயிலில் நன்னெறி வகுப்பு துவங்கியது.
மைய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கோவில் நிர்வாக தலைவர் மாரிச்சாமி முன்னிலை வகித்து சிறுவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை துவக்கி வைத்தார். மைய ஆசிரியர் உஷா நன்னெறி பயிற்சி அளித்தார்.
திருவிளையாடல் புராண வினா விடை தேர்வில் மாணவர்களை தேர்வு செய்து, மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் பரிசு, சான்றிதழ் வழங்க உள்ளதாக, நிர்வாகிகள் ச.தமிழ்மணி, அ.சரவணன், ராமமூர்த்தி தெரிவித்தனர்.

