ADDED : ஆக 16, 2024 04:40 AM
மதுரை: தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில சிறப்புத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ராஜகோபால் பேசினர். 2023-24 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள துறைநிலை ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரத்து 500 ஆகவும், 2025 பட்ஜெட்டிற்குள் உயர்த்தி வழங்க வேண்டும்,
விடுபட்ட குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக ரூ. ஆயிரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக கோவிந்தன், ஸ்ரீனிவாசரங்கன், ராமசாமி, கோமதிநாயகம், அழகப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய துணைச் செயலாளராக ஸ்ரீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார்.

