/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு
/
செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு
ADDED : ஏப் 25, 2024 03:54 AM
மதுரை, : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமானத்தில் 2022 ஆக.,13 ல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. தமிழக அமைச்சர் தியாகராஜன் மரியாதை செலுத்தச் சென்றார். அவரது கார் மீது காலணி வீசப்பட்டது. பா.ஜ.,வை சேர்ந்த வேங்கைமாறன் உட்பட சிலர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வேங்கைமாறன், சோலைமணிகண்டன் உட்பட 12 பேர்,'குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.
நீதிபதி பி.புகழேந்தி: கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவனியாபுரம் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் 14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

