/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அத்தியாவசிய உணவு பொருளுக்கு வரிவிலக்கு தேவை
/
அத்தியாவசிய உணவு பொருளுக்கு வரிவிலக்கு தேவை
ADDED : ஆக 12, 2024 03:22 AM
மதுரை, : அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவைகளின் தயாரிப்பு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பலசரக்கு சில்லரை வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் சங்கத்தின் 77ம் ஆண்டு விழா நடந்தது. தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இணைச் செயலாளர் முத்தரசு ஆண்டறிக்கை வாசித்தார். இணைச் செயலாளர் வெற்றிவேல் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.
வேளாண் பொருட்களின் ஆலைத் தயாரிப்புகளான அரிசி, பருப்பு, மாவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களித்தல், இணக்க வரி விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைத்தல், உணவு மாதிரிக்கான கட்டணத்தை மாதிரி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமாக மாற்றுதல், பண விரயத்தை தவிர்க்க தராசுகள், படிக்கற்கள் மறுமுத்திரை வைப்பதற்கு ஆன்லைனில் ஒரே படிவமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைகல்வியாளர் சுந்தரவேல் வழங்கினார். மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து கவுன்சிலர் அருண்குமார் விளக்கினார். வணிகர்களின் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து பூமிநாதன் எம்.எல்.ஏ., பேசினார். துணைத் தலைவர் முருகன் நன்றி கூறினார். பொருளாளர் கருப்பையா, செயலாளர் கணபதி, சட்ட ஆலோசகர் அருஞ்சுனை,துணைத் தலைவர் மணிமாறன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.