ADDED : மார் 01, 2025 04:40 AM
மதுரை: கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்படுவதாகதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் 'சிலம்பு' ரயில்களில் (20681/20682) மார்ச் 1 முதல் ஜூன் 19 வரை, தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் ரயில்களில் (22657/22658) மார்ச் 2 முதல் ஜூன் 17 வரை ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன.
ரயில்வே வாரியத்தால் மார்ச் 2 முதல் 20 வரை நடத்தப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை (கான்ஸ்டபிள்) தேர்வு எழுதுவோர் வசதிக்காக திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் (22627) மார்ச் 2 முதல் 18 வரை, திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயிலில் (22628) மார்ச் 3 முதல் 19 வரை ஒரு பொதுப் பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன.