மதுரை : மதுரை தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ஆர். லட்சுமிபதி ஆலோசனை படி உறுப்பினர்கள் இரணியம் சுந்தர்ராஜன்பட்டி புது கண்மாயை சீரமைத்தனர்.
கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகள் நட்டனர். நிர்வாகிகள் உச்சி மகாலிங்கம், ரவி, ராகவன், சுவாமிநாதன், துரை விஜயபாண்டியன், ஜெகதீஸ்வரன், கண்ணன்,நல்லோர் குழு உறுப்பினர்கள் அறிவழகன், ராஜேஷ், செல்வி, கல்யாணி, ராஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும் ரோட்டரி மாவட்டம் 3000 பேராசிரியர்ராஜா கோவிந்தசாமி, கிழக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாலகுரு, பிரேம்குமார், பாஸ்கர், வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் அழகு வேலாயுதம், செயலாளர் குமார், பஞ்., தலைவர் நேரு பாண்டியன், அழகர் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டனர். நீர்நிலைகளை பாதுகாத்து மதுரையை நீர் மிகை மாவட்டமாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

