ADDED : ஜூன் 15, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் ஆண்டிபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் மதன் தலைமையில் பரிசோதகர் ரவிக்குமார் 40 பேருக்கு பரிசோதனை செய்தார். இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட 10 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராம கிருஷ்ணன் செய்திருந்தார்.