நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் சி.எஸ்.ஐ., பள்ளியில் தங்கமயில் ஜூவல்லரி, 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
உறவின்முறை தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பொன்னையா, வீரமாரி பாண்டியன், கோபால் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் வரவேற்றார். ஜூவல்லரி நிர்வாகி செல்வம் முகாமை துவக்கி வைத்தார்.