/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயிலால் வேகமாக வற்றும் கண்மாய்கள்
/
வெயிலால் வேகமாக வற்றும் கண்மாய்கள்
ADDED : ஏப் 01, 2024 05:42 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் அதிகரித்துள்ள வெயிலால் கண்மாய்களில் நீர் வேகமாக வற்றத் தொடங்கியுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் பருவமழை வழக்கத்துக்கு அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாய்களில் நீர் நிறைந்தது. இதனால் விவசாயிகள் நெல், காய்கறிகள் பயிரிட்டனர். ஒரு மாதமாக வெயில் மற்றும் வெப்பக் காற்றால் கண்மாய்களில் நீர் வேகமாக வற்றி வருகிறது. கண்மாய்களின் நீர் வற்றி வருவதால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி வருகிறது.
இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியுமா என கவலையில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''கண்மாய் பாசனத்தை நம்பி நெல் நட்ட விவசாயிகள் தண்ணீர் வற்றி வருவதால் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருண பகவான் கருணை காட்ட வேண்டும்'' என்றனர்.

